136 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
9 தண்டூன்றும் பெரியார் தண்டூன்றிப் பெரியார் நடந்தார் - இங்குத் தமிழ்மாந்தர் தடுமாறித் தாழ்வுக்குள் வீழாமல் - தண்டு தொண்டுகிழம் கொண்டாலும் துவளாமல் நின்றார் தொண்டடிமை செய்தவர்கள் தோள்நிமிர்ந்து வென்றார் - தண்டு உயர்ந்தவர் தாழ்ந்தவர் பிறப்பினில் ஓதும் ஒருசிலர் வாழ்வினை உயர்த்திடும் வேதம் தயங்குதல் இன்றிஅம் மாயையை வீழ்த்திடத் தமிழக மாந்தரைத் தட்டியெ ழுப்பிடத் -தண்டு சாத்திரக் கோத்திரச் சண்டைகள் நாளும் சாதிகள் மோதிட மண்டைகள் வீழும் ஆர்த்தெழும் ஐயாவின் போர்க்குரல் சூழ அக்குரல் கேட்டதும் ஆரியம் வீழத் -தண்டு 19.6.79 |