பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்135

8
உடைத்தெறிந்தார்

உடைத்தார் அறப்போர் தொடுத்தார்- ஐயா
உலகம் எதிர்ப்பினும் ஒருதனி நின்றே- உடைத்தார்

படைத்தான் அழித்தான் காத்தான் என்றெலாம்
படித்தார் உரைத்தார் பழங்கதைச் சடங்கெலாம்

- உடைத்தார்

எத்தனை எத்தனைச் சாதி - அவை
என்றும் நிலைத்திடச் சாத்திர நீதி
பித்தரைப் போலினும் ஓதி - வரும்
பீடைகள் கேடுகள் யாவையும் மோதி

- உடைத்தார்

கற்பனை பற்பல கூவிப் - பல
கட்டுக் கதைகளை மெய்யெனத் தூவி
விற்பனை செய்தனர் பாவி - அந்த
வெற்றுரை யாவையும் செற்றிடத் தாவி

- உடைத்தார்

18.6.1979