134 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
7 தட்டி எழுப்பினார் தட்டி எழுப்ப வந்தார்- நம்மைத் தட்டி எழுப்ப வந்தார் - ஐயா தன்மான எண்ணத்தை வளர்க்க வந்தார் - தட்டி பட்டிகள் தொட்டிகள் பட்டண ஊர்களில் மட்டிகள் போலினும் வாழ்ந்திடும் மாந்தரைத் - தட்டி கொண்டித் தொழுவத்தில் கட்டிய மாடெனக் குப்பையில் மேய்கிற கோழிக ளாமெனச் சண்டை யிடும்மதச் சாத்திரக் குப்பையில் சாதியில் கட்டுண்டு சாய்ந்து கிடந்தோரைத் - தட்டி அண்டிப் பிழைத்தவர் ஆட்சி பிடித்தனர் ஆட்சி புரிந்தவர் மாட்சி யிழந்தனர் மண்டி யிடும்பல தொண்டு புரிந்தனர் மாயையில் தூங்கினர் கண்கள் திறந்திடத் -தட்டி 18.6.1979 |