பக்கம் எண் :

138கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

11
ஆதவன்

நினைஆதவன் என்று நினையாதவன் - ஒன்றும்
புரியாதவன் கண்கள் திறவாதவன் - ஐயா

- நினை

மண்மேவும் அறியாமை இருள்யாவும் தொலைக்கும்
மதிமேவும் ஒளிபாயும் செயல்யாவும் விளைக்கும்

- நினை

ஆண்டவர் யார்உரிமை பூண்டவர் யாரென
அறியாமல் நினையாமல் அசையா திருந்தோம்
மூண்டெழும் போர்மறவன் போலெழுந் தார்ர்த்தனை
முன்னவர் யாமெனும் உரிமையைச் சேர்த்தனை

- நினை

கண்மூடி வழக்கங்கள் கடவுளர் விளக்கங்கள்
கதைகூறும் மயக்கங்கள் கயமையின் குழப்பங்கள்
மண்மூடிப் போகட்டும் மடமைகள் சாகட்டும்
மதிமேவி வாழட்டும் எனக்கூறி மார்தட்டும்

- நினை

20.6.1979