பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்201

38
அண்ணா வழியில் அயராதுழைப்போம்

சங்கங்கள் மூன்றமைத்துப் புலவர் வேந்தர்
       சமமாக வீற்றிருந்து தமிழைக் காத்தே
எங்கெங்கும் புகழ்மணக்கத் திகழ்ந்த நாடு;
       வணிகத்தைப் போர்த்திறத்தை எடுத்துக் காட்ட
வங்கங்கள் பலசெலுத்தி வளர்ந்த நாடு;
       வளமிக்க அரசியலைத் தெரிந்த நாடு;
நங்கையவள் காவிரித்தாய் வளர்த்து விட்ட
       நாகரிகத் தொட்டிலென வாழ்ந்த நாடு.

எங்கெங்கோ திரிந்தவர்கள் இங்கு வந்தார்
       ஏமாந்த தமிழினத்தார் மனம்நெ கிழ்ந்தார்;
அங்கங்கே அமர்ந்தவர்கள் துறைகள் தோறும்
       ஆரியத்தின் கொள்கைகளைப் புகுத்தி விட்டார்;
தங்கங்கள் நிறம்மாற ஒளியும் மாறத்
       தந்திரங்கள் மந்திரங்கள் பூசி விட்டார்;
சிங்கங்கள் குள்ளநரிக் கடிமை யாகிச்
       சீர்கெட்டு வாழ்ந்திடவே மாயை செய்தார்.

தென்னாட்டை, வந்தவரால் அடிமையான
       திருநாட்டைச் சீர்திருத்தி மீண்டும் சங்கப்
பொன்னாட்டை உருவாக்கச் சினந்தெ ழுந்த
       போராட்டப் பெரியார்ஓர் பாட்டை கண்டார்;
தென்பூட்டும் ஈரோட்டார் தனித்து நின்றே
       திருகுகள்ளி முட்புதர்கள் கன்முள் காளான்