4 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
கோட்ட வாயில் உலகப் பெருமையை நமக்கு ஈட்டித் தந்த ஒரு நூல் திருக்குறள். அத்தகு சிறப்பு வாய்ந்த நூல், தமிழ்மறை என்று சாற்றவும் படுகிறது. உலகப் பொதுமை ஓதுவதால் பொதுமறை எனவும் புகலப்படுகிறது. அத்தகு பெருமை வாய்ந்தது நம்மறை. நம்மறையை நாம் உணர்ந்துள்ளோமா? உணர்ந்து நடக்கின்றோமா? நெஞ்சில் கைவைத்து விடை சொல்ல நமக்கு வாயுண்டா? குறள்நெறி, நாம் ஒழுகியிருப்பின் இன்று காணும் கொடுமைகள் நடைபெறுமா? மக்கட்பண்பும் மறைந்திருக்குமா? மக்களை நம்மால் காணமுடிகிறதா? எங்கோ சிலரே அரிதாகத் தென்படுகின்றனர். திருக்குறள் நம்மறை என நம்புவது உண்மை யானால் அரசியல், சமுதாய இயல், தனி மனித இயல், இப்படிப் பாழ்பட்டிருக்குமா? ஆதலின் நம்மறை கூறும் நெறி முறைகள் நாடெங்கும் பரவ வேண்டும் என்னும் ஆர்வத்தால், இந்நூல் வெளியிடப் பெறுகிறது. உங்கள் ஒத்துழைப்பும் இருப்பின் அவ்வார்வம் நிறைவேறும். நிறைவேறின் சண்டை ஏது? சச்சரவு ஏது? மக்கட் பண்பல்லவா நம்முள்ளங்களில் தாண்டவமாடும். உலகப் புகழுக்கும் நாம் உரியராவோம்! வருக! கை தருக! வள்ளுவம் பற்றிய பாடல்கள் தொகுக்கப் பெற்றமையால் வள்ளுவர் கோட்டம் என்னும் பெயருடன் இந்நூல் உலாவருகிறது. அலுவலகங்களிலும், ஆலயங்களிலும், நண்பர்கள் இல்லங்களிலும், நாடக அரங்குகளிலும், புகும்பொழுது இடத்திற்கேற்ற மன நிலையைப் பெறுகிறோம். அதுபோல் இக்கோட்டத்தினுள் புகுவார்க்கும் ஒரு மன நிலை வேண்டும். இம் மனநிலைதான் ஆன்ற பயன் தரும். தண்ணீர் மேல்மட்டத்திலேயே தோன்றிக் காட்சி இன்பம் தரும் தாமரை மலர் போன்று, மேலோட்டமாகப் பயில்வார்க்கு இன்பம் பயப்பனவும் இந்நூலுள் உண்டு. நீந்திக் குளிப்பார் பெறும் இன்பம் போல, இறங்கி |