நீந்துவாரும் இன்பம் மாந்திக் களிப்பர். மூழ்கி எழுவார், உயரிய பொருள்கள் பெற்றுத் துய்த்தலும் ஆகும். இதில் இன்பங்காண விழைவார்க்கு ஓரளவேனும் மொழிப் பயிற்சியும், நூற் பயிற்சியும் வேண்டப்படுவனவாம். பயிற்சியில்லார் எதிற்றான் இன்பங்காண முடியும்! ஆதலின் பயில்க! பயன் பெறுக! அன்புள்ள முடியரசன் |