பக்கம் எண் :

266கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

இயல் - 4

மன்னவன் மொழியால் மனமிகப் புலந்து
பன்னரும் வேழன் படர்ந்தனன் பிரிந்தே.

ஆட்டாளுந் திறமில்லான் மதியு மில்லான்
      அரியணையில் அமர்தகவு மில்லா னேனும்
நாட்டாண்மை பெற்றிருந்தான் மதலைக் கோமான்;
      நடத்தையெலாம் பெயருக்குப் பொருந்தி நிற்கும்;
காட்டாளி வலிமைக்குக் காட்டாய் நின்று
      கருதலரை வெருவுறுத்தும் மாவே ழற்குக்
கூட்டாளி எனவிருப்பான் ஒருகால்; பின்னர்க்
      குணமாறிப் பகையாளி போல நிற்பான்.13

கூடுவதும் மாறுவதுந் தொழிலாக் கொண்ட
      கொற்றவன்பாற் படைத்தலைவன் சினந்து தன்னூர்க்
கோடுவதும் சான்றோர்கள் சந்து செய்ய
      உளமிரங்கி மீளுவதும் வழக்க மாகும்;
ஏடுவிரி மலர்த்தொடையல் மார்பின் மன்னன்
      ‘என்பிழைக்கு வருந்துவல்யான்’ என்று ரைக்கும்;
நீடுபுகழ்ப் பெருவீரன் நாட்டின் காதல்
      நெடிதோங்கி நின்றமையாற் குறைபொ றுக்கும்.14

வருபொருளை ஆய்ந்துணரா மன்னன் ஓர்நாள்
      வாய்காவா துரைத்தமையாற் பிணங்கி வேழன்
“ஒருபொழுதும் ஈங்கினிநான் உறைதல் வேண்டேன்;
      ஒன்னார்தம் படைநாப்பண் சிக்குங் காலம்
வருபொழுது தன்மடமைக் கிரங்கி வேந்தன்
      வாய்விட்டுப் புலம்புவதைக் காண்பேன்” என்று
தரியலர்க்குக் கூற்றாவோன் பரிமா வேறித்
      தனிமையொடு கடிநகரின் நீங்கிச் சென்றான்.15


ஆட்டாளும் திறம் - நிருவகிக்கும் ஆற்றல்.ஆளி- யாளி என்னும் விலங்கு, காட்டு - எடுத்துக்காட்டு.
கருதலர் - பகைவர். சந்து - சமாதானம். தொடையல் - மாலை.