270 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
கொய்யுளையாற் பொலிபுரவி முகத்தான் மோதிக் கொட்புற்றுக் கொட்புற்றுப் புறங்கால் கொண்டு மெய்யுளைய உதைத்துதைத்துத் துள்ளித் துள்ளி மேவலர்தம் பிணிப்பகற்ற இயலா தங்குச் செய்வழியும் அறியாமற் களைத்த லுத்துத் திகைப்புறுங்கால் அவ்வீரர் இறுகக் கட்டி மெய்ந்நலிய வயந்தநகர்க் கீர்த்துச் சென்றார்; மேலவனைப் பிரியாமா பிரிந்த தந்தோ! 22
வலித்தார் - இழுத்தார், கொய்உளை - வெட்டிவிடப்பட்ட பிடரிமயிர் கொட்புற்று - சுழன்று. |