பக்கம் எண் :

274கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

இயல் - 9

புரவியை வேண்டிப் புகுந்திடும் வேழன்
விரவிய அவன்பால் வெகுண்டுரை கூறினன்

சினமடங்கல் அனையவன்மா வேழன் கொண்ட
      சினமடங்க வில்லை; அவன் உருத்து நோக்கி,
‘மனமகிழ்ந்து வரவுரைக்கும் மன்னா! நின்றன்
      மதிக்குடைக்கீழ் வாழ்ந்திருப்போர் கள்வர் தாமோ?
புனநிழலில் நானயர்ந்து துயிலும் போழ்து
      புகுந்துசிலர் என்புரவி கவர்ந்து வந்தார்;
எனதுயிரின் அனையபரி மீட்டுச் செல்ல
      இவண்வந்தேன்; விரைந்ததனைக்கொணர் தல்வேண்டும்.29

விரைந்ததனைக் கொணர்ந்திலையேல் மன்னா நீதான்
      வீண்பழிக்கே ஆட்படுவை; என்றன் நெஞ்சில்
நிறைந்தெழுமென் சினத்தீக்கு முன்னர் நிற்கும்
      நிலைமையினை எய்திடுவை’ எனக்க னன்றான்;
கரைந்தசின மொழிகேட்ட வயந்தர் வேந்தன்;
      கசந்துமன முளைந்தாலும் மறைத்து நின்றான்
உறைந்தபகை குறைந்திருநாட் டரசும் அப்போழ்
      தொருமையுடன் வாழ்வதனால் பொறுமை கொண்டான்.30


மடங்கல் - சிங்கம், உருத்து - சினந்து, புனம் - காடு, இவண் - இங்கே, உளைந்தாலும் - வருந்தினாலும்,