இயல் - 11 வயத்தரசன் தருவிருந்தில் மாவேழன் மகிழ்ந்திருந்தான் வருகைதரும் வீரனுக்குப் பெருவி ருந்து வைத்திருந்தான் வயவேந்தன், கற்றோர் மற்றோர் பெருமைமிகு படைத்தலைவர் வணிக மாந்தர் பெருஞ்செல்வர் இவரனையார் குழுமி வந்தார்; பருவஎழில் நன்மாதர் நடனங் கண்டும் பருகுவன உயரியன அருந்தி நின்றும் இரவதனிற் பெரும்பொழுது களிப்பில் மூழ்கி இன்பமெனும் கடற்பரப்பில் அவன்தி ளைத்தான்.35 உள்ளிருக்கும் குருதிஎலாம் சொட்டச் சொட்ட உடலங்கள் கூத்தாடும் போரே கண்டோன் கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் மாத ரார்தம் களிநடனங் கண்டிருந்தான்; கைகள் கொட்டி நள்ளிரவுப் பொழுதுவரை மகிழ்ந்தி ருந்தான்; நயந்துரைகள் பலபேசி அவன்பால் நட்புக் கொள்ளலுக்கு வந்தவரை அன்பால் நோக்கிக் கொலைவேலான் உரையாடித் துயிலச் சென்றான்.36
குருதி - இரத்தம் கள் - தேன் |