| 276 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
பாரகத்தை நடுங்குறுத்தும் மடங்கல் போன்றான் பகரரிய பெருவீரன் வருகை கேட்ட ஊரகத்து மாந்தரெலாம் குழுமி யாண்டும் உவகையொடு வாழ்த்தொலிகள் எழுப்பி நின்றார்; தாரடுத்த மார்பகத்தான் களிற்றின் மேலான் தலைநிமிர்ந்த தோற்றத்தான் வலமாச் சுற்றிக் காரடுத்த தலைவாயி லுட்பு குந்தான்; கண்விழித்துக் கண்டவர்கள் வியந்து நின்றார்.34
குழுமி - கூடி, தார் - மாலை, கார்- மேகம். |