| 284 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
உள்ளத்தைக் கவலைக்ககுத் தந்து விட்ட உண்மையினைக் கண்சொல்ல உணர்ந்த மன்னன், ‘துள்ளிச்செல் வேகத்தில் இணையே யில்லாத் துணைப்பரியை இழந்ததுயர் கொல்லோ’என்று மெள்ளத்தன் வாய்திறந்து மொழிய ‘ஆம்! ஆம்! மேவுமொரு பொருளிழந்த இழப்பே போல உள்ளத்தில் ஓருணர்வு கவ்வி நின்றே உறுத்துவதால் இந்நிலையை உற்றேன்’என்றான்.53 ‘நிமிர்தோளாய் என்னாட்டில் இழப்பே யில்லை; நின்துணையை நான்தருவேன் கவலை கொள்ளேல்! தமராக நினைக்கொண்டேன்; நின்க லக்கம் தவிர்ப்பதுவே எனதுகடன்; புரவி தன்னை எமர்தேடி ஈங்குய்ப்பர்’ என்றான் மன்னன்; ‘என்துணையை எனக்களித்துத் துயர்க ளைந்தால் குமுறுமென துளமமைதி கொள்ளும்’ என்று கூர்வேலிற் கூர்மதியான் கூறிச் சென்றான்.54
இகல் - வலிமை, தமர்- உறவினர், எமர் - எம்மவர். |