பக்கம் எண் :

வீரகாவியம்287

இயல் - 17

காதல்தரும் ஓவியத்தின் எழிலைக் கண்டு
கலங்கிமனம் வெதும்பியவன் புலம்பி நின்றான்.

வலைப்பட் அரியேறு போன்று காதல்
      வயப்பட்டுச் செயலற்றுத் துயிலு மின்றி
அலைப்புண்டோன் நெஞ்சத்தில் தோன்றும் எண்ணம்
      ஆயிரமாய் ஆயிரமாய்ச் சுழலும் வேளை
கலைப்பொலிவு நிறைந்தொளிரும் உருவக் கன்னி
      கட்டழகி ஒருத்தியவண் தோன்றக் கண்டான்;
உலைக்குருகின் வெய்துயிர்ப்போன், முன்னாள் கண்ட
      உருவமது முறுவலித்து நிற்கக் கண்டான்.59

உருவினுக்கும் முறுவலுக்கும் கடைக்கண் காட்டும்
      ஒளியினுக்கும் மனமுடைந்தோன் வியந்து சென்று
மருவுதற்குக் கையிரண்டும் நீட்டி நின்றான்;
      மயக்கத்தின் விளைவினுக்கு நாணி நின்றான்;
பெருமகற்குத் தோல்விதரும் உருவம் உண்மைப்
      பெண்ணன்று; வினைவல்லான் கைவண் ணத்தால்
வருமுருவம் எனவுணர்ந்து தளரும் வீரன்
      வாட்டமெலாந் திரண்டுருண்ட வடிவ மானான்.60

நெருநலிர விடைவந்து தன்னுள் ளத்தில்
      நிலைத்துவிட்ட பெண்ணணங்கென் றெண்ணிச் சென்று
மறுகுமவன் ஏமாற்றம் உற்றா னேனும்
      மங்கையவள் எழிலெல்லாம் வடித்துக் காட்டும்


உலைக்குருகு- கொல்லுலைத்துருத்தி. முறுவலித்து - புன்னகைசெய்து ,வினைவல்லான் - ஓவியம்வல்லான்.
நெருநல் - நேற்று.