| 288 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
திருவுருவப் படமதனில் வைத்த கண்ணைத் திருப்பாமல் இமைக்காமல் விழித்து நோக்கி இருவிழியும் கனியிதழும் நிலவை வென்ற. எழில்முகமும் சுருள்குழலும் வியந்து நின்றான்.61 ‘பனிவிழிகள் நாணத்தின் குழைவு காட்டிப் பருகுமெனைப் பாடுறுத்தித் துயரில் வாட்டும்; கனியிதழ்கள் பவளத்தின் செம்மை காட்டிக் காணுகின்ற என்னுளத்தில் வெம்மை கூட்டும்; நனிபொழியும் எழில்முகத்தை, முறுவல் பூக்கும் நளினத்தை, விழிக்கடையைச் சாயல் தன்னை வனையுமவன் பரிசில்பெற வரைந்தா னல்லன்; வாட்டிஎனைத் துயர்ப்படுத்த வனைந்தான்’ என்றான். 62
நளினம் - இங்கிதம். வனையுமவன் - ஓவியன் |