பக்கம் எண் :

296கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

இயல் - 21

காதலியைக் காண்பதற்கு விழைந்தான் வேழன்
கரையருகே வாவென்று பணித்தாள் தோழி.

‘எனைவிழைந்தாள் இளவரசி என்ற செய்தி
      இதுகாறும் உரையாமல் ஏனோ தாழ்த்தாய்?
நினைவிழந்து துயரடைந்து வாடச் செய்தாய்!
      நீமொழிந்த மறைமொழியால் சோர்வே தந்தாய்!
உனையிரந்து வேண்டுவல்மற் றொன்று தோழி!
      உளங்கவர்ந்த எழில்மகளைத் தனித்துக் காண
முனையுமெனக் குதவுதல்நின் கடனே யாகும்;
      முப்பொழுதும் எப்பொழுதும் மறவேன்’ என்றான்.79

‘துடிக்கின்ற பெருவீர! என்னை யிங்குத்
      தூதனுப்பித் தன்கருத்தை நின்பாற் கூறிக்
கிடைக்கின்ற நல்விடையைக் கொணர்க என்று
      கிள்ளைமொழி இளவரசி விடுப்ப வந்தேன்;
பிடிக்கடங்கு துடியிடையாள் நினைவா லிங்குப்
      பேதுற்றுத் தவித்தனை நீ; அதனாற் சொல்லி
முடித்துவிட மனமின்றி மனத்தின் ஆழம்
      முழுதுணர உரையாடி நின்றேன் ஐய!80

மனத்திலவள் நினைத்தவணம் வீரன் நின்னை
      மணம்புரியும் பேறடைந்தாள்; வாழி எங்கள்
அனத்தைவெலும் நடையழகி’ என்றாள் தோழி;
      ‘அவளினுமோர் பெரும்பேறு நானே பெற்றேன்


பிடிக்கு - கைப்பிடிக்கு. துடி - உடுக்கை.