பக்கம் எண் :

வீரகாவியம்295

எனமொழிந்த தோழியுரை கேட்டான் வீரன்
      இறும்பூது மீக்கூர நிலைத்து நின்றான்;
முனமெழுந்த சினமடங்கி, ஆங்கு நின்ற
      மொய்குழலி முகம்நோக்கி நகைத்துக் கையால்
தினவெழுந்த தோள்தட்டி ஆர்த்த ஓசை
      திசையெங்கும் மோதிஎதிர் ஒலிக்கக் கேட்டான்;
முனமடைந்த வென்றிகளிற் காணா இன்பம்
      மொய்ம்புடையான் நெஞ்சத்துட் புகுதக் கண்டான்.78