| 294 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
வன்றிறலன் இன்றுளனோ? என்றன் வாளின் வாய்மழுங்கிப் பொன்றியதோ? அவன்பேர் கூறாய்! நின்றன்முனம் கொன்றுடலைக் கிழிப்பன் கூறாய்! நிலைகுலையா வீரத்தின் ஆணை’ என்றான்.74 ‘மூவகத்துப் பெருநாட்டின் வீரன் என்றாய் மொய்குழலி! காதலைநான் இழந்து விட்டுப் போவதற்கு மனமிசைவேன்; என்றன் வீரம் புல்நுனியின் அளவேனும் குறைவ தென்றால் சாவதற்கும் நான்தயங்கேன்; என்னின் மிக்க தறுகணன்யார்? யாதவன்பேர்? நொடியிற் கூறு; பூவகத்து வாழ்வானை விண்ண கத்துப் போய்ப்புகுதச் செய்வித்து மீள்வேன்’ என்றான்.75 ‘அப்பெயரை நின்முன்பு கூறல் நன்றோ? அஞ்சுகின்றேன்; பெண்மைக்கு முறையு மன்று; தப்பெனவே உலகுரைக்கும்; மேலும் நீதான் தரியலர்க்குக் கூற்றாவாய் உண்மை; ஆனால் ஒப்பரிய இளவரசி உளங்க வர்ந்த ஒருவனை நீ என்செய்ய இயலும்?’ என்றாள்; ‘செப்புகஅப் பெயரென்றால் ஏதே தோநீ செப்புகின்றாய்’ எனஇடிபோல் முழங்கி நின்றான்.76 செப்புகின்றேன் உண்மைநிலை சினவேல் ஐய! சீயங்கள் பலகுழுமி எதிர்நின் றாலும் உட்புகுந்தே விளையாடி அவற்றை யெல்லாம் ஒவ்வொன்றா எடுத்தெறியும் ஆற்றல் மிக்கான்; இப்புவியின் இளவரசி காதல் நெஞ்சில் இடங்கொண்ட பேறுடையான் யாவன் என்றே துப்பறியத் துடிக்கின்றாய்! நின்னை யன்றித் தொல்லுலகில் யாவருளார் வீரன் என்றே’.77
பொன்றியதோ - அழிந்ததோ, தறுகணன் - வீரன். சினவேல் - கோபிக்காதே. சீயம் - சிங்கம். |