வயத்தரசன் அவையகத்தே உளஓர் வீரன் வளங்கெழுமும் மூவகத்தை வெல்வான் வேண்டி நயத்தெழுதல் ஊர்முழுதும் பரவக் கேட்டு நல்லஇளங் காளையர்கள் படையிற் சேர்ந்தார்; வியத்தகுநற் செயலுக்கு மகிழ்ந்த மன்னன் விறன்மிகுதன் கவசத்தைத் தலைவற் கீந்து பயக்கட்டும் பெருவெற்றி என்று வாழ்த்திப் பலமறவர் படைகளுடன் அனுப்பி வைத்தான்.271 மகப்பெறுபடலம் முற்றும்.
நயத்தெழுதல் - விரும்பியெழுதல். தலைவள் - படைத்தலைவனாகிய கோளரி. |