பக்கம் எண் :

114கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

‘தோயுமுளக் கதிர்மணியும் கா.சு. பிள்ளை1
       எனச்சொல்லுந் தூயவரும் கலைக ளெல்லாம்
ஆயுமுயர் கழகத்தின் இரண்டு கண்கள்;
       யாம்பயிலும் அந்நாளில் அந்த மேலோர்
ஞாயிறெனத் திங்களெனத் திகழ்ந்து நிற்பர்;
       நல்வர்பாற் பயிலஎழும் ஆர்வம் உந்தப்
பாயுமலைக் கடல்கடந்து சென்றோம்; அங்குப்
       பலகற்றோம் எம்வாழ்வின் பயனும் பெற்றோம்’ 16

‘அகப் பொருளோ புறப்பொருளோ நீதி நூலோ
       எதுவெனினும் அளவில்சுவை சொட்டச் சொட்டப்
புகட்டிடுவார் அச்சுவையிற் சொக்கி நிற்போம்;
       பொழுதகலல் தெரியாது பாடஞ் சொன்னால்,
அகத்துறுவோர்2 விரும்பியநூல் உரைப்ப தற்கும்
       அகஞ்சலியார் அவருளமும் புலமுங் கண்டு
திகைப்புறுவோம்களிப்புறுவோம்;’ இவையனைத்தும்
       தென்னிலங்கை இலக்குமண ஐயர் சொற்கள் 17

கலைமலிந்த கதிரேசர் செறிந்த கல்விச்
       கடலாக அந்நகரில் விளங்குங் காலை,
3புலம் விழைந்து வந்ததனுட் படிந்து மூழ்கிப்
       புனலுண்டு திசையெங்கும் படர்ந்து சென்று
நிலங்குளிர்ந்து செழுமையுற மழைபொ ழிந்து
       நிலவிவரும் மாமுகில்கள் பலவாம்; மேலும்
நலம்மிகுந்த தமிழ்மொழியாம் பயிர்வ ளர்ந்து
       நாட்டகத்து விளைபயனும் பலவாம் இங்கே. 18

மலர்விரிந்து கனிமிகுந்து நிழலும் நல்கி
       மணம்பரப்பும் பூம்பொழிலே மணியார்; அங்கே
அலர்குடைந்து1 மட்டுண்ட சுரும்பி னங்கள்
       அங்கங்கே யாழிசையை வழங்கி நிற்கும்;


1.பேராசிரியர் கா.சுப்பிரமணியபிள்ளை
2 வீடுதேடிவருவோர் 3அறிவு,
1 தேன்,