பக்கம் எண் :

ஊன்றுகோல்133

தரைமகிழ அளித்ததிரு வாசகத்துள்
       தனிநிலையிற் றோய்ந்து தோய்ந்து
நெறிமுறையில் உரைதந்தார் அவ்வுரையின்
       நிலையுரைக்க எவரால் ஒல்லும்? 2

அணுவுக்குள் மறைந்திருக்கும் ஆற்றலினை
       அளந்தறிய வல்லார் போலக்
கணுமிக்க கரும்புநிகர் சொல்லுக்குள்
       கரந்திருக்கும் பொருளெ டுத்த
துணிவுக்கு வியந்துலகம் போற்றியது
       சொலற்கரிய புலமை யுற்ற
திணிவுக்கு வாழ்த்தியது வாசகத்தின்
       தெளிவுக்குள் திளைத்து நின்றே. 3

கண்டுநிகர் சொல்லுக்குள் கடைந்தெடுத்துக்
       காணுகின்ற நயங்கள் சொல்லி
மண்டுமதன் சுவைசொல்லி முறைவைப்பில்
       மருவிவரும் நோக்கம் சொல்லிக்
கண்டபிற ஒப்புமையும் உடன்சொல்லிக்
       காட்டிவரும் புலமை யாலே
பண்டையுரை யாசிரியர் வரிசைபெறும்
       பண்டிதராய் விளங்கி நின்றார். 4