பக்கம் எண் :

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் 233

10. யாகப் பெற்றமைக்கும் தாம்ர சாசனம் பண்ணித்தர
      வேண்டுமென்று கிடாரத்தரையர் துதன் ராஜவி

11. த்யாதர ஸ்ரீ சாமந்தனும் அபிமானோத்துங்க ஸ்ரீசாமந்தனும்
      விண்ணப்பம் செய்ய இப்படி சந்திவிக்ரஹி

12. ராஜவல்லபப் பல்லவரையனோடுங் கூடஇருந்து
      தாம்ரசாசனம் பண்ணிக் குடுக்க என்று அதிகாரி

13. கள் ராஜேந்த்ர சிங்கமூவேந்த வேளார்க்குத் திருமுகம்
      ப்ரசாதஞ் செய்தருளி வரத் தாம்ர சாசனஞ்செய்தபடி
      கடாரத்த

14. ரையன் கெய மாணிக்க வளநாட்டு பட்டனக் கூற்றத்து
      சோழகுலவல்லி பட்டனத்து எடுப்பித்த ராஜராஜப்
      பெரும்பள்ளி

15. க்கு பள்ளிச் சந்தம் கெயமாணிக்க வளநாட்டுப் பட்டனக்
      கூற்றத்து ஆனைமங் கலம் நிலந்தொண்ணூ ற்றேழே
      இரண்

(இரண்டாம் ஏடு, முதல் பக்கம்)

16. டு மாக்காணி அரைக்காணியும் முன்புடைய காணி
     ஆளரைத் தவிர இப்பள்ளிச் சங்கத்தார்க்கே
     காணியாகவும் இது காணிக்கடன் நெல்லு

17. எண்ணாயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்து
      முக்கலனே இருதூணிக் குறுணி முன்னாழியினால்
      நிச்சயித்த நெல்லு நாலாயிரத்

18. தைஞ்ஞூ ற்றுக் கலமும் ஆனைமங்கலத்து பிரமதேயம்
      நிலம் பன்னிரண்டே முக்காலினால் நெல்லு
      நானூற்றுக்கல

19. ம் நிச்சயித்த நெல்லுஐஞ்ஞூற்று அறுபதின் கலமும்
      இன்னாட்டு முஞ்சிகுடி நிலம் இருபத்தேழே முக்காலே
      முக்காணி அ