142 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 |
எல்லாமாய் அல்லதுமாய் இருந்த பாங்கை இருந்தபடி பொருள்விளங்க இருந்து காட்டிச் சொல்லாமற் சொன்னவரை நினைந்து வாழும் தொழிலுடையார்,1 உருக்குவதில் எடுப்பும் ஈடும் இல்லாத வாசகத்தேன் மாந்தி மாந்தி இளகுகிற மனமுடையார்,2 மீண்டும் வாயாற் சொல்லாமற் பொழிவிழியால் முகக்கு றிப்பால் தொழுமிருவர் சொல்வதெலாம் சொல்லிக் கொண்டார். 16
1.அடிகளார், 2. பண்டிதமணியார், இருவருமே இரு தொழிற்கும் உரியவர். |