பக்கம் எண் :

ஊன்றுகோல்145

‘முந்தையாம் செய்த வத்தால்
       முதல்வநின் மக்க ளானோம்
தந்தையாய்த் தாயாய் எம்மைத்
       தாங்கியே புரந்து நின்ற
எந்தையே எங்குச் சென்றாய்
       இரங்கவைத் தேகி விட்டாய்!
எந்தவா றிதுபொ றுப்போம்?
       எங்ஙனம் உய்யு மாறே?’ 2

புலவர் புலம்பல்

‘சிந்தித்துச் சிந்தித்து வாழ்நா ளெல்லாம்
       செயலாற்றி வந்ததமிழ்ப் பெரியார் எங்கே?
சிந்தித்துக் கண்டவற்றை நிரல்ப டுத்துச்
       செவிகுளிரத் தந்தபே ரறிஞர் எங்கே?
புந்திக்குள் இருளகற்றி ஒளியும் நல்கிப்
       பொலிந்திருந்த கதிரெங்கே? எங்கே?’ என்று
சந்தித்த புலவரெலாம் கண்ணீர் சிந்தித்
       தாளாத துயரத்தில் மூழ்கி நின்றார். 3

செல்வர் புலம்பல்

‘பெருநிதியாற் களிப்புற்றேம் ஆயினும்யாம்
       பேதலித்தேம் அமைதி யின்றி,
பெருமதியால் நீகண்ட பாட்டின்பப்
       பேறனைத்தும் யாமும் துய்க்கத்
தருமுறையால் தந்தனைநீ செல்வத்தைத்
       தகுவழியிற் செலவு செய்ய
ஒருமதியால் உரைத்தனைநீ; என்செய்வேம்?
       ஒன்றறியேம்’ என்றார் செல்வர். 4

திருமடங்கள் புலம்பல்

‘மணிமொழியை1 மனம்வைத்தாய்
       வளர்கலையை மதிவைத்தாய்
அணிமதியைத் தலைவைத்தான்
       அடியிணையைத் தலைவைத்தாய்


1.திருவாசகம்