146 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 |
பணிபுரியும் திருத்தொண்டர் பழங்கதையும் மூவர்தரும் கனிமொழியும் மொழிவதற்குக் கதிர்மணியே நாவைத்தாய்.’ 5 ‘உலகமெலாம் சிவமயமாய் ஒளிபெறவே உளங்கொண்டாய் அலகில்பிற சமயங்கள் அடுத்துறினும் அகச்சமயம் குலவிவருஞ் சித்தாந்தக் குறிக்கோளைத் தெளிந்துணர்ந்தாய் நலமருளும் சிவநெறியில் நடந்தொழுகும் அருள்பெற்றாய்.’ 6 ‘அறுபத்து மூவர்வர லாறுதெளிந் தறிந்தனைநீ ஒருபத்தும் தொகையெட்டும் உளவாறு நுகர்ந்தனைநீ இருபற்றும் உடைமையினால் எழிற்றமிழும் சிவநெறியும் பருவத்துப் பயிர்போலச் செழித்துயரப் பரப்பினைநீ.’ 7 ‘மறவாத சிவனடியும் மருளாத தமிழுணர்வும் திருவாத வூரடிகள் வாசகமும் தெளிந்ததனால் பிறவாத பேரியாக்கை பெறுமாறு வேண்டுது’மென் றொருவாத அன்புளத்தால் திருமடங்கள் ஓதினவே. 8 |