பக்கம் எண் :

ஊன்றுகோல்147

மாணவர்புலம்பல்

‘அழுக்கறுக்கும் நூல்களிலே பெரியனவாம்
       அரியனவாம் என்ப வேனும்
பழுத்திருக்கும் நுண்மதியால் எளிதிலவை
       படிப்பித்தாய், எங்கள் வாழ்வில்
முழுத்தகுதி பெறுவதற்கும் நல்வழிகள்
       மொழிந்தாய்நீ மறப்ப தேயோ?
வழுத்துகிறோம் நின்னடியை’ எனநினைந்து
       மாணவர்தாம் வணங்கி நின்றார். 9

சன்மார்க்க சபையார் புலம்பல்

‘தலைவிக்கோ தலைவனில்லை; மகனுக்கோ
       தாயில்லை; பூத்தி ருக்கும்
மலருக்கோ மணமில்லை, வானுக்கோ
       மதியி;ல்லை, மறவர் கூட்டத்
தலைவற்கோ வாளில்லை; சன்மார்க்க
       சபையினுக்கோ நீதான் இல்லை
நிலைமைக்கே என்செய்வோம்?’ எனச்சபையார்
       நெஞ்சுழன்று மயங்கி நின்றார். 10

கவிமணி புலம்பல்

‘பத்தரெலாம் போற்றிவரும் பண்டிதமா
       மணியேநீ வாத வூரர்
சித்தமெலாங் கசிந்துருகிச் சிவமாகிச்
       செய்தருளும் வாச கத்தின்
புத்தமுதைக் கடைந்தெடுத்து வழங்கிவரும்
       புண்ணியந்தான் 1முற்றா முன்னர்
அத்தனடிக் காளாகி அதனிழலில்
       அமர்ந்தனையே ஐயா ஐயா!’ 11

‘அடங்கொண்ட நோயதனால் அல்லலுக்கே
       ஆளாய்நிற் கின்றேன், காலன்
வடங்கொண்டு வருங்காலம் வாராதோ
       எனைநோக்கி என்று நொந்தேன்


1.திருவாசக உரைமுடியுமுன்னே.