154 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 |
‘பூமியின் வாழ்க்கை யொன்றே புலமையின் குறிக்கோ ளன்று; தோமிலா1 அறிவைக் கூட்டித் துய்யநல் லொளிய தாக்கித் தாமுனர்க் காணா இன்பந் தருபொருள் ஒளியால் நோக்கி ஏமுறல்2 ஒன்றே கல்வி எய்தியோர் குறிக்கோள்’ என்றார். 15 ‘உயர்பெரும் நோக்கங் கொண்ட ஒப்பிலாக் கல்வி தன்னை மயர்வுற உடலை யோம்பும் வாழ்க்கைக்கே வழியாக் கொண்டால் வயல்தனில் வரகுக் காக வளம்பெறும் பொன்னாற் செய்த உயரிய கொழுவைப் பூட்டி உழுவதற் கொப்பா’ மென்றார். 16 பண்படும் ஒழுக்கம் மிக்கோர் பகர்தரும் வாய்ச்சொல் யாவும் ஒண்டமிழ் மாந்தர்க் கென்றும் ஊன்றுகோ லாகுங் கண்டீர்; பண்டித மணியார் தந்த பயன்தரும் ஊன்று கோலைக் கொண்டுளந் தளரா வண்ணம் கூடியே நடப்போம் வாரீர். 17
1.குற்றமில்லா, 2.இன்புறல் |