174 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 |
தமிழன்னை ஆட்டுவிக்க ஆடியுள்ளேன். ஆட்டத் திற்குறைநிறை காணின் அஃது என்னைச் சாராது. என்னையுங் கூட்டுவித்து, இதனை எழுதப் பணித்தவர், என் கெழுதகை நண்பரும் மதுரை, காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலை வரும் ஆய்வுச் செம்மலும் ஆகிய தமிழண்ணல் முனைவர் இராம.பெரிய கருப்பனாவார். இதனையெழுத, உரமான- ஆழமான அறிவுரைகள் கூறி, நன்னடை நல்கி, ஊக்கியுதவியவர், முன்னைத் துணை வேந்தரும் உழுவலன்பரும் தொல்காப்பியச் செம்மலும் ஆகிய முனைவர் வ.சுப.மாணிக்கனாராவார். இவ்விரு மணிகளும் என் தமிழ் நெஞ்சுள் அலை செல்வோராவர். காரைக்குடி, அன்பன் 29.10.85 முடியரசன் |