பக்கம் எண் :

182கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

  ஒன்னலர் மறைத்தனர்; உறங்கினர் தமிழர்.
மூவருள் ஒருவன்நின் முன்னோன் இவன்றான்
காவிரி நாட்டுக் கோநலங் கிள்ளி;
இளைஞன்:புனையா ஓவியப் பொற்புடைச் செல்வி
அனையாள் யாவள்? அரசி போல்வாள்
துறவி போலத் தோற்றமேன் கொண்டனள்?
முதியவர்:பெறலருஞ் செல்வப் பேற்றினள்; இவள்தான்
குறைவறு கற்பின் கோமகள்; தமிழ்மகள்
அறநெறி பிறழா நிறைமனச் செல்வி!
இளைஞன்:பாண்டவர் ஐவர்தம் பத்தினி யோஇவள்?
(முதியவர் தம்முள் நகைக்க)
ஈண்டென் வினாவிற் கேன்நகை செய்தீர்?
முதியவர்:நன்கு வினவினை; நகையெழா தென்செயும்?
தென்புலக் கற்பின் திறமொருங் குணர்த்த
வடபுலப் பெண்ணோ வாய்த்தனள்? எனநின்
மடமையை யெண்ணி மனத்துள் நகைத்தேன்;
கோதறி யாமகள் மாதவி இவள்பேர்!
இளைஞன்:மாதவி யாவிலை மகளவி ளன்றோ?
முதியவர்:கலைமகள் பிறப்பால் விலைமகள் எனினும்
விலையிலாக் கற்பின் குலமகள்; கொழுநன்
கோவலன் இறந்ததால் கோதை யவளோ
யாவுந் துறந்தனள்; அரும்பெறல் மகட்குந்
துறவு தந்துபார் தொழும்நிலை தந்தனள்;
அறநெறி வழுவா அன்னை யிவளும்
ஐவர் இருந்தும் ஆறாம் ஒருவனை
விழைந்த அவளும் வேறுவே றியல்பினர்;
இளைஞன்;பற்பல உண்மைகள் பயனுள பெற்றேன்
கற்பன கற்பேன் காப்பன காப்பேன்;