இளைஞன் | : | நரைமூ தாட்டி நகைமுகங் காட்ட அரசன் முகத்தில் ஆர்வம் பொங்க அவள்கை யகத்தொன் றளப்பாள் போலுள சுவரின் ஓவியம் சொல்லுவ தென்ன? |
முதியவர் | : | நிலவரை ஆட்சியிற் புலவரை யாட்சி நிலைபெற விழைந்த நெடுமான் அஞ்சி தன்வாழ் நாளினும் தமிழே பெரிதென உன்னியோன் ஒளவைக் குவந்தொரு நெல்லிக் கனிதனை யளிக்குங் காட்சி யதுவாம்! இனிய தரிய தெனினும் தானுணான் நனிமுது புலமையள் வாழ நாடினன்! உதுக்காண் மைந்த ஒப்பிலாச் சிற்பம்! செதுக்கும் இவைதாஞ் சிற்பம் என்பது தொட்டார்க் கன்றிப் பட்டாங் கறிதல் கிட்டா தாகும்; . . . . . . . . . . . . . . . . |
இளைஞன் | : | . . . . . . . . . . கிழமைப் பெரியீர் படர்தரும் உயிரைப் படைக்கும் ஆற்றல் உடலைப் படைத்தஅவ் வுளிக்கிலை போலும்; |
முதியவர் | : | ஈங்கொரு சிலைகாண் எடுப்பும் மிடுக்கும் வீங்கிய தோளும் விளங்குமோர் வீரன்; |
இளைஞன் | : | மன்னனோ? . . . . . . . . . . . . . . . . |
முதியவர் | : | . . . ஆமாம் மணிமுடி யரசன் மனையா ளன்றி மற்றவள் தோளிற் குழையா தாகும் கொற்றவன் தாரே; |
இளைஞன் | : | தயரதன் மைந்தனோ? . . . . . . |
முதியவர் | : | . . . . . . . . . தடுமா றுளத்தினை: அயலவர் தம்மை அறிந்தாங் குன்னினம் பெருமை தெரிந்து பேணுதல் விடுத்தனை; நெறிபிறழ் வுற்றது நின்பிழை யன்று; தென்னவர் திறமெலாம் தெரிவுறா வண்ணம் |