186 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 |
இளைஞன் | : | கண்கள் கலங்கினீர் கற்றுள நீரே புண்படின் என்மனம் பொறைகொளல் யாங்ஙனம்? பருவரல் தவிர்க பைந்தமிழ் வீரன் பெருவர லாறு பேசுக பெரியீர் | முதியவர் | : | நலம்பெற ஆண்ட வலந்தரு பாண்டியன் குலமனை அரியணைக் கோமகள் எழில்மகள் மாறன்மா தேவி மணிவயி றீன்ற தேறிய கலைஞன் தென்மொழிப் பாவலன் தொழுதகு நடையினன் துணிவுடை மறவன் வழுதிப் பெயரோடு வளர்ந்தவன் அவன்றன் அளக்கரின் மாய்ந்த அளப்பருந் துயரை விளக்குவன் கேண்மோ விறலோன் கதையே. |
|
|
|