பக்கம் எண் :

இளம்பெருவழுதி187

காட்சி 2

  தண்டமி ழாசான் வெண்டலை நாகன்
பண்டைநல் லமுது படைத்தன ராகப்
பொங்குதேன் குழலி பொற்புடை வழுதி
செங்கதிர் எழுங்காற் செவிவா யாகப்
பருகிக் களித்தனர் பைந்தமி ழமுது
பெருமிதப் புலவர் திருமனை யமர்ந்தே
  0000
வழுதி:அறந்தரு கல்வி வயங்கெழு போர்மறம்
சிறந்த தெதுவெனச் செப்புதிர் பெரியீர்
நாகனார்:இருவிழி யவற்றுள் எவ்விழி சிறந்தது?
பெருமை சிறுமை பேசுதல் யாங்ஙனம்?
இலக்கியம் இலக்கணம் எனுமிவ் விரண்டு
கலைக்குட் சிறந்தது காணல் முறையோ?
ஆண்மை பெண்மை ஆயிரு தன்மையுள்
மேன்மையென் றொன்றை விளம்பல் தகுமோ?
செறிதரும் அறிவு செங்கள வலிமை
விரிநீர் வைப்பிற் கிரண்டும் வேண்டும்;
மறுவறு கல்வி மனநலங் காக்கும்;
நிறைவுறு மறமோ நீள்விலங் காக்கும்; நகைத்துக் கொண்டே)
வழுதி:பேசிய கல்வி பெண்களுக் குரித்தோ?