பக்கம் எண் :

194கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

கோட்புலி:யானைப் போரொடு பரிப்போர் தேர்ப்போர்
மற்போர் முதலா விழவுமேம் பட்ட
நற்போர் பலவும் நடாத்தினர் அந்நாள்;
முன்னைப் பொராஅது முதன்முதற் பொருவது
கன்னிப் போரெனக் கழறப் படூஉம்;
வழுதி:நாற்போர் நிகழ்ச்சியுங் கேட்கும் வேட்கை
மேற்பட லாலவை விளம்புக ஐய;
  தேர்ப்படை
கோட்புலி:மண்ணாடர் வியந்தாட வலிவோடு சமராட
 மறவீரர் மோது களமே
தென்னாடர் துணிவொடு தினவோடு முணர்வோடு
       திறல்வேல்கள் வீசு களமே
பண்ணோடு மணிபாடப் படர்வானிற் கொடியாடப்
       பரியோடு வந்து பொருதேர்
நண்ணாரின் உயிராட நடைவீரர் உடலாட
       நடுவாகச் சென்று வருமே
  யானைப்படை
  நெட்டுமதில் முற்றுகையில் நின்றபகை
       கண்டவர்கள் நெஞ்ச மழிவார்
கட்டுமர மிட்டகத வைக்கடிதின்
       மூடியொரு காத மகல்வார்
கொட்டுமத முற்றகளி றக்கதவை
       மோதஅது கூறு படுமே
பட்டுநுனி கட்டுதொடி விட்டுவில
       கிச்சிதறிக் கெட்டு விழுமே
  குதிரைப் படை
  முறுகுசி னத்துடன் அடிகள்பெ யர்த்தொரு
       முனைமுகம் முற்றிலுமே
முறுகுப ரிக்குலம் பகைமரு மத்திடை
       வலியமி தித்திடவே