பக்கம் எண் :

இளம்பெருவழுதி195

   மறலியெ னத்தகும் மறவரு குத்திடும்
       நிறைகுரு திப்புனலால்
உறைகுரு திக்கறை படிய மதர்த்தெழும்
       ஒலியெழு போர்க்களமே.
  காலாட்படை
  வீறு படைத்தவர் வீரர் படைக்குலம் வெல்போரில்
கூறு படுத்தலின் வீழும் உடற்பிணங் கூத்தாடும்
மாறு கெடுத்தனம் மானம் மிகுத்தனம் என்றேதாம்
சாறு குடித்தலிற் சால மதர்த்துடல் தள்ளாடும்
  மாரி போல வாளி பாய
   மார்பில் ஏந்தும் வீரர்கள்
சோரி பாறு வேல்கள் பாயச்
   சூழ நிற்குஞ் சூரர்கள்
கூரி தாய கோடு கொண்டு
   குத்த யானை கூடினும்
போரில் மாயும் மான மொன்றே
   பூண்டு நிற்பர் போகிலார்.
  வீரர் நெஞ்சில் வேல்கள் பாய
   மேவும் புண்ணின் வேதனை
வீர மாதர் செய்ய யாழில்
   சேர்ந்து காஞ்சி பாடுவார்
ஊரில் எங்குந் தூமம் நாற
   ஊதும் ஆம்பல் ஊதுவார்
நேரும் புண்ணில் மெல்ல மெல்ல
   நெய்கள் பூசி ஆற்றுவார்
  அலைதாவிடுங் கடல்மீதினில்
   அணியாய்மரக் கலமே
அடலேறெனும் படைவீரராம்
   அணியோடுடன் செலுமே