| | | கொலைமேவிய பகையாளிகள் குழுவாயவண் வருவார் குலமோடிடப் புறமாகிடக் குலையாதிவர் பொருவார் வலியாலொரு சமமானவர் வரினேசமர் புரிவார் வருவோர்வலி குறைவாரெனில் வயவாளினை எறியார் மலைபோலெதிர் வருவாரொடு மருளார்சிலை தொடுவார் மரபோபிற இடமோஅதில் மறையார்களை விடுவார். |
| வழுதி | : | வெய்ய மறக்குலம் விளைத்த போர்நெறி மெய்சிலிர்ப் பெய்தும் வியப்பிற் றாயினும் வையம் நடுக்குற வழிசெயும் அவ்வெறி அறத்தின் இரீஇய மறச்செய லன்றோ? வெறுக்கும் உயிர்க்கொலை விழைதல் முறையோ? |
| கோட்புலி | : | தன்மகற் புரப்பாள் அன்னை; தந்தையோ சான்றோன் ஆக்கும்; மன்னவன் நடைகள் நல்கும்; மறப்படை கொடுக்குங் கொல்லன்; பின்னவன் கடமை யென்ன? பெருஞ்சமர் முருக்கிக் காளை தன்னுயர் நாடு காத்தல் தலையறம் ஆகுங் கண்டாய் |
| | | வில்லெனும் ஏர்கள் பூட்டி உழுபவர் வெங்க ளத்து வல்லுடற் குருதி பாய்ச்சி வளவிய வெற்றி யென்றும் நல்விளை வடைவான் வேண்டி நண்ணிய களைகள் கட்டல் சொல்லமர் அறமே கண்டாய் தொடுகழல் மறவர்க் கைய |