பக்கம் எண் :

198கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

கோட்புலி:கடாஅம்பொழி கரியும் கடும்விசைப் பரியும்
கடாவல் தெள்ளிதிற் கைவரப் பெற்றனை;
அணிவகுத் தமைத்தல், ஆங்கட் பகையின்
அணியுடைத் துட்புகல், அவ்வுழைப் புகுந்து
பிணியுற வின்றித் துணிவொடு பெயர்தல்
நீள அனைத்தும் நெறியிற் றெரிந்தவை;
போரூர் முனையிற் றேரூர் திறனும்
பாரோர் போற்றப் பயின்றனை யாகின்
அளப்போ ரறியாக் களப்போர் நாப்பண்
வளைப்போர் நடுக்குற வயப்போ ராற்றும்
தகவு பெறுவை தலைமையும் அடைவை
இகலோர் படைகொடு எதிர்வர அஞ்சுவர்;
வழுதி:தண்டமி ழாசான் வெண்டலை நாகனார்
கொண்டருள் பயிற்றக் கோடா அறமும்
கண்டோ ருட்கக் களிற்றின் தோற்றங்
கொண்டோய் நின்னாற் குறையா மறமும்
தவலறப் பெற்றனென் தனிப்பெரும் பேறே;
அவரான் மனமும் நின்னாற் றோளும்
தெளிவொடு வலிவும் திண்மையும் பெற்றன;
கோட்புலி:அணியோய் அடக்கம் அமரருள் உய்க்கும்
நில்லா வுலகில் நிலைக்கும் நின்புகழ்
மல்லார் திண்டோள் மறக்குல வழுதி
மருளும் மாலை இருளொடு புக்கது
வருதி நாளை வளமனை சென்றே.