| | | வஞ்சி நாடனும் காழக மன்னனும் வெஞ்சமர் புரிய விழைவது தெரிந்து பாண்டிய மன்னன் பகர அவையில் ஈண்டிய புலவர் இனியநல் லமைச்சர் அருமறக் கணியர் பொருசமர்க் கடம்பன் பொருள்நிறை மொழிகள் புகன்றனர் ஆங்கே |
| | | 0 . 0 . 0 . |
| நாகனார் | : | வாழிய வேந்தே வாழிய தாயகம் |
| பாண்டியன் | : | வாழிய தாயகம் எனும்நும் வாய்மொழி ஏழிசை யாழின் இனித்தது புலவீர் தாயகம் தாங்குநர் தாமுறு பருவரல் தோயுநர்க் கன்றித் தோற்றா வாகும்; |
| நாகனார் | : | நினக்கொரு படரோ? நினைத்தலும் முறையோ? மனக்கவல் தவிர்க . . . . . . . . |
| பாண்டியன் | : | . . . . . . . . மாசறு மனத்தீர் வான்முகில் பொய்ப்பின் வளமிகக் குன்றும் மீன்கொடி வாழ்நர் மெலிவரென் றச்சம்; |
| நாகனார் | : | நெறியிற் கோடா முறைநீ புரிதலின் கருமுகில் என்றுங் கரப்பது காணேம் நிழல்தருங் குடையோய் நின்நிழல் வாழ்நர் வளமும் நலமும் வாடுத லறியார்; உளமிக நோதல் ஒழிமதி பெரும; |