அழியாத வரமளித்தாள் தமிழ்த்தாய், அந்தத் தள்ளைக்கு நானடினைம யான திந்தச் சன்மார்க்க சபையென்னும் கோவிலிற்றான்’ (3:32) கதிர் எழுந்து மறைந்த ஒருநாள் நிகழ்ச்சி போல ஒரு வாழ் நாளைச் சொல்லும் இக்காப்பியம் கதிராரை மட்டும் காட்டிற்றிலது. அவர் காலத் தமிழகத்தின் ஒரு பகுதியையே காட்டி நிற்கிறது. சொல்வளமும் நடைநலமும் மிக்க இக் காப்பியம் பொருள் நிறைவும் உணர்வுச் செறிவும் மிக்கதாக, மிளிர்கிறது; என்றுமுள தென்றமிழ் இன்றும் வளர்கிறது; இனியும் வளரும் என்பதைக் காட்டும் காலத்துக்கேற்ற காப்பியம் இதுவாகும். |