76 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 |
உன்போல் அன்பன் ஒருவன் ஆங்குளன் அன்பன் அவன்பொருள் உன்பொரு ளாகும் வேறென நினைத்தல் வேண்டா, நாளையே 1சேறி மகிபால புரிக்கெனச் செப்பிக் கதிரேச அன்பனைக் கண்டென் கட்டளை 95 இதுவெனக் கூறு; புதுவகை அன்பால் ஐயா யிரமவன் அளிப்பான் நின்னிடம் மெய்யான் அவன்தரும் ஐயா யிரமும் பெற்று வந்து முற்றா திருக்கும் நற்றிருப் பணியை முற்றுறச் செய்க’ 100 கட்டளை யிதனைக் கந்தன் அருளினன் ஆங்கவன் கட்டளை தாங்கி வந்ததை ஈங்குய்ப் பதுவே இவன்கட னாகும்’ எனுமொழி இயம்ப, இருமொழிப் புலவர் நனிமிக மகிழ்ந்து பனிவிழி ததும்ப 105 மெய்ம்மயிர் சிலிர்ப்பக் கைம்மலர் குவித்து ‘முருகா நின்பெருங் கருணைதான் என்னே! உருகா நின்றுளம் உன்பெயர் ஓதிப் பெருகும் அடியவர் எத்தனை பேருளர்! அவரெலாம் இருக்க அடியேன் மாட்டுக் 110 கட்டளை யிட்ட கருணையே கருணை! கிட்டரும் புண்ணியச் செயல்செயக் கிளத்தி அடியனை ஆளா ஆக்கிய அருட்குப் படிமிசை எங்ஙனம் பாராட் டுரைப்பேன்? என்ற மொழியால் எழுந்தருள் பத்தர்க் 115 கிரட்டிப் பாக எழுந்தது நம்பகம்; மீண்டுங் கூறினர்; ‘ஆண்டவன் முருகன் ஈண்டருள் ஆணையை ஏற்று முடிப்பேன்; எளியேன் எனையும் பொருட்டென எண்ணி அளியீர் கனவிடை அருளிய கந்தன் 120 கட்டளை பற்றிஎன் கனவிலும் தோன்றிச் சுட்டி யருளுதல் ஆகா தோ?அம்
1.செல்வாய். |