பக்கம் எண் :

ஊன்றுகோல்77

முருகன் அருட்கியான் முழுத்தக விலனோ?
நெடுந்தொலை வென்றும் நினையா னாகிப்
படர்ந்திவண் உமைவரப் பணித்த முருகன் 125
எளியேன் கனவிலும் வாரா திருப்பனோ?
அளியன் அவன்தான் அடியேன் கனவிடை
இற்றை இரவில் எழுந்தருள் செய்குவன்
மற்றைநாள் விடியல் கட்டளை நிறைவுறச்
செய்குவன்’என்று செப்பின ராக; 130
உருகும் புலவர் உரையால் அவர்க்கு
பெருகும் நம்பிக்கை பிறந்தது; பின்னர்
முருகன் அடியவர் முகத்தில் ஐயமும்
மறுகித் தோன்றி மறைய, ‘முருகா
அவ்வணம் ஆகுக’ எனுமொழி அருளிக் 135
கவ்விய இரவு கழிந்தபின் மறுநாள்
தண்புன லாடி வெண்பொடி பூசி
முன்பொலி வேடம் மும்மடங் காகப்
புனைந்து வந்தஅப் புண்ணியர் ‘முருகா
முருகா’ என்று மொழிந்துகை கூப்பி 140
இருந்தனர்; இருந்தவர் வரவெதிர் நோக்கிப்
புனலும் ஆடிப் பொடியும் ஆடி
முனமுறு நிலையினும் முகப்பொலி வுடனே
புலவர் இருத்தலைப் புண்ணியர் நோக்கி
அலைவுறும் ஐயம் அகன்றன ராகி 145
உருகி யெழுந்த உள்ளத் தன்பின்
முருகிய நிலைபோல் ‘முருகா’ என்றனர்;
புலவர் மணியும் புன்னகை பூத்தே,
‘அலகிலா விளையாட் டாறு முகனாம்
முருகன் திருவருட் பெருமைதான் என்னே! 150
வேண்டுவார் வேண்டுவ தீவதோ டன்றி
மும்மடங் குதவுவான் வள்ளல் முருக’னென்
றிம்மொழி கூறி; ‘அம்மநும் பத்தியால்
எளியேன் எனக்கும் எழில்மிகும் முருகன்
அளிய னாகி அருளினன் காட்சி 155