78 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 |
எத்தகு கோலம்! எத்தகு காட்சி! ஆ ஆ! அளப்பரும் பேரொளிப் பிழம்பு நீல மயிலில் நேரிழை யாருடன் கோலக் காட்சி கொடுத்தருள் புரிந்தனன் இரவிடைக் கண்ட காட்சிதான் என்னே! 160 முருகன் அருளே அரு’ளென மொழிந்தனர்; கேட்ட துறவி, வேட்டது பெற்றோம் போட்ட திட்டமும் பொய்த்தில தாகி ஐயா யிரமும் மெய்யாம் என்று செய்யான் அடிகளைச் சிந்தை செய்தனர்; 165 முருகனார் மகிழ்வை முகத்தான் உணர்ந்த திருவினார் சிலசொல் செப்பினர் ‘ஐய, உள்ளிய தொகையோ ஓரைந் தாயிரம் வள்ளல் முருகன் காட்டிய வழியால் மும்மடங் காகி நம்மிடம் வருமாம் 170 அம்முதல் பெற்றதும் அதிலொரு பங்கை நீவிர் விழைந்த கோவில் எழுப்பவும் மேவும் முருகனை நாளும் வழிபட மற்றொரு பங்கை வழங்கவும் பணித்தனன்; எஞ்சிய ஐந்தை இவண்எழும் நும்போல் 175 வஞ்சமில் லன்பர் வருவ ராயின் அவர்தமக் குதவ அருளினன்;அதுகேட் டுவகை மீக்கூர்ந் தொள்வேல் முருகா அருட்பெருங் கடலே ஆண்டவா நின்னுளக் கருத்தினை முடிக்குங் கடப்பா டுடையேன் 180 ஆயினும் அடியேன் அத்தனைப் பெரும்பொருள் ஈயும் நிலையில் இன்றிலேன் நின்றன் ஆணையை எவ்வணம் ஆற்றுவேன்? என்னக் காணும் வழியுங் காட்டினன் முருகன்’ என்ற மொழிகேட் டீடிலா மகிழ்வில் 185 ஒன்றிய உளத்தால் உறுதவ வேடர் ‘வடிவேல் முருகா வாய்த்தநின் ஆணையை அடியர் இவர்க்கும் அருளினை என்னே!’ |