என்றுபா ராட்டி இருமொழிப் புலவரின் ஒன்றும் முகத்தை உற்று நோக்கி’ 190 ‘முழுமுதற் பொருளாம் முருகன் பொருள்பெற வழிசொலா திருப்பனோ? அவன் சொலும் வழியை அடியன் இவனுக் கறைதல் ஒல்லுமோ?’ என்னலும், புலவர் ‘எழில்வேல் முருகன் சொன்ன மொழிகள் தூய மறையெனப் 195 போற்றத் தக்கன; பொருந்திய நெஞ்சம் ஏற்றுளோம் ஆதலின் இசைத்தநல் வழியை நும்மிடம் புகல இம்மியுந் தடையிலை’ என்று கூறி எதிர்வெளி நிலத்தில் நின்ற வெள்வேல் மரத்தினைச் சுட்ட, 200 ஒன்றும் தோன்றா உளத்துட னிருந்த சாமியை நோக்கிச் சாற்றினர் புலவர்; வெள்வேல் முருகற்கு மிகவும் உகந்தது வள்ளல் கைவேல் வெள்வே லன்றோ? இம்மரம் அதன்பேர் ஏற்றுள தாதலின் 205 அம்மரம் விரும்பினன், அதனைக் காட்டி அதன்கீழ்த் திசையில் ஆறு முழத்தில் பதமுற ஆழந் தோண்டிப் பார்ப்பின் பசும்பொன் அங்கே பதுங்கிக் கிடக்கும் எடுத்ததைத் திருப்பணி இயற்றத் தருகவென் 210 றருளிச் செய்தனன் ஆறு முகத்தான்’ என்றதும் மகிழ்ச்சி ஏகிய முகத்தில் துன்றும் வருத்தந் தோன்ற இருந்த துறவியை நோக்கித் ‘தொழுதகு பெரியீர்! அருளிய ஆணையை ஐயுறல் வேண்டா 215 கந்தன் நமக்கருள் கட்டளை பொய்க்குமா? இந்தப் பணியில் இன்னுமேன் தாழ்வு? தொடுகுழி அமைத்தல் தொண்டர் நமக்கே இடுபணி யாகும் ஆதலின் ஐய, 220 ஊரார் அரவம் ஒடுங்கிய பின்னர் ஈராறு கையன் இட்ட பணியை |