80 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 |
இன்றிராப் பொழுதே இருவருந் தொடங்குதும்’ என்றனர் புலவர்; இரங்கிய குரலில் வந்தவர் திருவாய் மலர்ந்தனர் ‘செய்யலாம் 225 தொடுகுழி யதனுட் படுபொருள் ஒருகால் அடைதல் இயலா தாகினென் செய்வோம்!’ என்னுமோர் ஐயம் எழுப்பலும் ‘ஆஆ! இன்ன வகையில் எண்ணுதல் தகுமா? நெடுந்தொலை விருந்திவ் விடந்தனில் வரஉமைக் 230 கடம்பன் அருளினன்; இருவர் கனவிலும் மயி;ல்மிசை ஏறி மனைவி மாரொடும் அயில்வேல் முருகன் காட்சி யருளினன்; பொன்னின் புதையல் பொருந்தும் இடமும் சொன்னவன் அவனே, சொலும்அம் மொழியில் 235 ஐயம் உறுதல் அடாத பாதகம்; ஐய நும்போல் அறியாத் தனத்தால் மெய்யன் மொழியில் ஐயம் உற்றுநான் ஆண்டவா முருகா அக்குழி யதனைத் தோண்டிய பின்னர்ச் சொலும்பொன் இலையேல் 240 யாமென் செய்குவோம்?’ என்று வினவ, ‘பூமென் முகத்திற் புன்னகை அரும்பி, ஆறு முகத்தான் சீறுத லின்றித் தேறுதல் மொழியுஞ் செப்பினன்; அந்தக் கலியுக வரதன் கருணைதான் என்னென 245 மலியும் உவகை மனத்தன் ஆகினேன்’; எனுமொழி கேட்டவர் இக்குழி தோண்டுதல் இன்றியே அப்பொருள் எளிதிற் கிடைக்கலாம் அன்றித் தோண்டினும் அப்பொருள் கிடைக்கலாம் என்று நினைந்துளம் ஆறுதல் எய்தி, 250 ‘வழிபடும் முருகன் வழிதரா திருப்பனோ? வழியென எதனை வாய்மலர்ந் தருளினன்? எளியன் இவனுக்கியம்புக’ என்றனர்; அடியவர் அவாவின் விரைவினைக் கண்டு, ‘பொடிசேர் மேனியீர் ‘புதையற் பொருள் பெற 255 |