96 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 |
வம்பே யில்லை’ என்றுரை வழங்க அன்றவ ரிருவரும் சிரித்தனர் ஆங்கே. மற்றொரு மேடையில் சொற்ற மொழியில் உற்றநகைச் சுவையை ஓர்ந்து தெரிக; ‘ஒருநாள் இரவில் உறுதுயில் கொள்ள 40 அரவணி பெருமான் கனவிடை வந்தார்; பெருமகிழ் வுற்றுநான் ஒருவரங் கேட்டேன்; இறைவன் என்பால் இன்முகங் காட்டித் ‘தந்தம்1 உமக்குப் போமெனச் சாற்றினர்; தந்தோம் உமக்கெனச் சாற்றினர் என்று 45 சிந்தையில் மகிழ்ந்தேன்; வந்தது விடியல் கனவும் வரமும் பலித்திடக் கண்டேன் ஆம்ஆம் பற்கள் அனைத்தும் விழுந்தன; எனலும் அவையோர் எழுப்பினர் நகையே தமிழோ டாங்கிலந் தக்கவா றுணர்ந்தோர் 50 அமிழ்தெனப் பொழியும் ஆற்றலர் ஒருவர் ‘அமெரிக்க நாட்டில் ஆங்கிலக் கவிஞர்என் றெமருக் குரைப்பேன்’ என்றொரு மேடையில் சொற்பெருக் காற்றினர்; மற்றது முடிந்ததும் முடிப்புரை தொடுக்கும் வழக்கினை விடுத்துத் 55 தமிழறி புலவர் தக்கவா றுரைத்தனர்; இன்றுநான் கேட்க இன்னுரை வழங்கியோர் இடைவேளை படைக்கும் 2இடைவேலை எனக்குத் தராது முடித்துத் தந்தனர் என்றுதாம் ஆங்கிலம் பயிலா அத்தகு நிலையைப் 60 பாங்குடன் குறிப்பாற் பகர்ந்தது கேட்டு நினைந்து மகிழ்ந்தது நீடிய அவையே. ஊன்றிய கோலின் உறுதுணை யதனால் ஆன்றவர் தளர்வுடன் அவர்தம் மனையில் ஈண்டிய படிகளில் இறங்குங் காலை 65
1தந்தோம் (பல்எனவும் பொருள்படும். 2.இடையில் முடிவுரை வழங்கும் வேலை. |