பக்கம் எண் :

ஊன்றுகோல்99

       பழையஓர் அறையிற் படுத்துதல் வேண்டும்
       முதலிற் கறையான் சுவைத்து முடிக்க 135
       எஞ்சிய பகுதியே இனியதே வாரம்
       பழந்தே வாரம் வந்த முறையிது
       அந்த முறையால் வந்தால் நுமது
       பாடலும் பெருமைப் பாடுடைத் தாகும்
       இவ்வணம் செய்தபின் எஞ்சிய பகுதியைக் 140
       கொணரின் பாயிரங் கொடுக்கத் தடையிலை
       என்று மொழிதலும் ஏகிய அவர்தாம்
       என்றும் வந்திலர் இக்குறிப் புணர்ந்தே.