10 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
4. மெய்யெழுத்துக்களின் முயற்சிப் பிறப்பு (க, ங, ச, ஞ, ட, ண இவற்றின் முயற்சிப் பிறப்பு) மக்கள்அரசாங்கம்மிச்சம் பிஞ்சுகட்டம்மண் இச்சொற்களில் உள்ள க், ங், ச், ஞ், ட், ண் என்ற மெய்யெழுத்துக்களை ஒலித்துப் பாருங்கள். அவற்றுள், க், ங் என்ற இரண்டு மெய்யெழுத்துக்களும், அடிநாக்கு மேல்வாயின் அடியைப் பொருந்தும் முயற்சியால் பிறக்கின்றன. ச், ஞ் என்ற இரண்டு மெய்யெழுத்துக்களும், நடுநாக்கு மேல்வாயின் நடுப்பகுதியைப் பொருந்தும் முயற்சியால் பிறக் கின்றன. ட், ண் என்ற இரண்டு மெய்யெழுத்துக்களும், நுனிநாக்கு மேல்வாயின் நுனிப் பகுதியைப் பெருந்தும் முயற்சியால் பிறக் கின்றன. இலக்கண விதி: க், ங் என்ற மெய்யெழுத்துக்களும் அடிநாக்கு மேல்வாயின் அடிப்பகுதியைப் பொருந்தும் முயற்சி யாலும், ச், ஞ் என்ற இரண்டு மெய்யெழுத்துக்களும் நடுநாக்கு மேல்வாயின் நடுப்பகுதியைப் பொருந்தும் முயற்சியாலும், ட், ண் என்ற இரண்டு மெய்யெழுத்துக்களும் நுனிநாக்கு மேல்வாயின் நுனிப் பகுதியைப் பொருந்தும் முயற்சியாலும் பிறக்கும். கஙவும் சஞவும் டணவும் முதலிடை நுனிதா அண்ண முறமுறை வருமே. (ந-நூற்பா 79.) (த, ந- இவற்றின் முயற்சிப் பிறப்பு) சத்தம் சந்தம் இச்சொற்களில் உள்ள த், ந் என்ற இரண்டு மெய் யெழுத்துக் களையும் ஒலித்துப் பாருங்கள். அவை மேல்வாய்ப் பல்லின் அடியை, நாக்கின் நுனி சென்று பொருந்தும் முயற்சி யால் பிறத்தல் தெரியவரும். |