பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்11

இலக்கண விதி: மேல்வாய்ப் பல்லின் அடியை, நாக்கின் நுனி சென்று பொருந்தும் முயற்சியால், த், ந் என்ற இரண்டு மெய்யெழுத்துக்களும் பிறக்கும்.

அண்பல் அடிநா முடியுறத் தநவரும்.

(ந-நூற்பா 80.)

(ப,ம இவற்றின் முயற்சிப் பிறப்பு)

அப்பா அம்மா

இச் சொற்களில் உள்ள ப், ம் என்ற இரண்டு மெய்யெழுத் துக்களையும் ஒலித்துப் பாருங்கள். அவை, மேலுதடும் கீழு தடும் பொருந்தும் முயற்சியால் பிறத்தல் தெரியவரும்.

இலக்கண விதி: மேலுதடும் கீழுதடும் பொருந்தும் முயற்சி யால் ப், ம் என்ற இரண்டு மெய்யெழுத்துக்களும் பிறக் கும்.

மீகீ ழிதழுறப் பம்மப் பிறக்கும்

(ந-நூற்பா 81.)

(ய, என்ற எழுத்தின் முயற்சிப் பிறப்பு)

தாய்சேய்

இச் சொற்களில் உள்ள ய் என்ற மெய்யெழுத்தை ஒலித்துப் பாருங்கள். அஃது, அடி நாக்கு மேல்வாய் அடியைப் பொருந்தும் முயற்சியால் பிறப்பது தெரியவரும்.

இலக்கண விதி: அடி நாக்கு மேல்வாய் அடியைப் பொருந்தும் முயற்சியால், ய் என்ற மெய்யெழுத்துப் பிறக்கும்.

அடிநா வடியண முறயத் தோன்றும்.

(ந-நூற்பா 82.)

(ர, ழ இவற்றின் முயற்சிப் பிறப்பு)

நீர் அமிழ்து

இச்சொற்களில் உள்ள ர், ழ் என்ற இரண்டு மெய்யெழுத்துக் களையும் ஒலித்துப் பாருங்கள். அவை, மேல்வாயை நுனி நாக்குத் தடவும் முயற்சியால் பிறத்தல் வெளிவரும்.