12 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
இலக்கண விதி: மேல்வாயை நுனி நாக்குத் தடவும் முயற்சியால், ர், ழ் என்ற இரண்டு மெய்யெழுத்துக்களும் பிறக்கும். அண்ண நுனிநா வருட ரழவரும். (ந-நூற்பா 83.) (ல, ள இவற்றின் முயற்சிப் பிறப்பு) வெல்லம் வெள்ளம் இச்சொற்களில் உள்ள ல், ள் என்ற இரண்டு மெய் யெழுத்துக்களையும் ஒலித்துப் பாருங்கள். அவற்றுள். ல் என்ற மெய்யெழுத்து, மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரமானது தடித்துப் பொருந்தும் முயற்சியால் பிறப்பது தெரியவரும். ள் என்ற மெய்யெழுத்து, மேல்வாயை நாக்கின் ஓரமானது தடித்துத் தடவும் முயற்சியால் பிறப்பது தெரியவரும். இலக்கண விதி: மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரமானது தடித்துப் பொருந்தும் முயற்சியால், ல் என்ற மெய் யெழுத்தும், மேல்வாயை நாக்கின் ஓரமானது தடித்துத் தடவும் முயற்சியால், ள் என்ற மெய்யெழுத்தும் பிறக்கும். அண்பன் முதலு மண்ணமு முறையின் நாவிளிம்பு வீங்கி யொற்றவும் வருடவும் லகார ளகாரமா யிரண்டும் பிறக்கும். (ந-நூற்பா 84.) (வ, என்ற எழுத்தின் முயற்சிப் பிறப்பு) நவ்விதெவ்வர் இச் சொற்களில் உள்ள வ் என்ற மெய்யெழுத்தை ஒலித்துப் பாருங்கள். அது, மேல் வாய்ப் பல்லைக் கீழுதடு சென்று பொருந்தும் முயற்சியால் பிறப்பது தெரியவரும். இலக்கண விதி: மேல்வாய்ப் பல்லைக் கீழுதடு சென்று பொருந்தும் முயற்சியால், வ் என்ற மெய்யெழுத்துப் பிறக்கும். |