மேற்பல் லிதழுற மேவிடும் வவ்வே. (ந-நூற்பா 85.) (ற, ன இவற்றின் முயற்சிப் பிறப்பு) நாற்று தென்னை இச்சொற்களில் உள்ள ற், ன் என்ற இரண்டு மெய் யெழுத்துக் களையும் ஒலித்துப் பாருங்கள். அவை, மேல்வாயை நாக்கு நுனி நன்கு பொருந்தும் முயற்சியால் பிறத்தல் தெரிய வரும். இலக்கண விதி: மேல்வாயை நாக்கு நுனி நன்கு பொருந் தும் முயற்சியால், ற், ன் என்ற இரண்டு மெய்யெழுத்துக்களும் பிறக்கும். அண்ண நுனிநா நனியுறிற் றனவரும். (ந-நூற்பா 86.) 5. சார்பெழுத்துக்களின் இட முயற்சிப் பிறப்பு அஃதுஇஃது இச் சொற்களில் உள்ள ஆய்த எழுத்தை ஒலித்துப் பாருங்கள் ஃ என்ற ஆய்த எழுத்தை ஒலிக்கும் பொழுது, உதானன் என்ற காற்று தலைக்குச் சென்று வாய் வரியாக வெளி வருகின்றது. எனவே, ஆய்த எழுத்திற்குப் பிறப்பிடம் தலையும், முயற்சி, வாய் திறத்தல் மட்டுமே என்பதும் தெரியவரும். திருக்குறள்திருவள்ளுவர் இச் சொற்களில் உள்ள தி என்ற வல்லின உயிர் மெய் யெழுத்தை ஒலித்துப் பாருங்கள். தி என்ற வல்லின உயிர் மெய் யெழுத்து மார்பு கழுத்து ஆகிய இரண்டு இடங்களையும் தனக்குப் பிறப்பிடமாகக் கொண்டு பிறப்பது தெரியவரும். தி என்ற உயிர் மெய்யெழுத்தில் (த்+இ=தி) த் என்ற வல்லின மெய்யெழுத்தும் இ என்ற உயிரெழுத்தும் உள்ளன. த் என்ற வல்லின மெய்யெழுத் திற்குப் பிறப்பிடம் மார்பு. இ என்ற உயிரெழுத்திற்குப் பிறப்பிடம் |