பக்கம் எண் :

14கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

கழுத்து. எனவே, தி என்ற வல்லின உயிர் மெய்யாகிய சார்பெழுத்து, தன் முதல் எழுத்துக்களுக்குரிய பிறப்பிடங்கள் இரண்டினையும் தனக்குப் பிறப்பிடங்களாகக் கொண்டு பிறப்பது தெரியவரும்.

முயற்சிப் பிறப்பில் த் என்ற வல்லின மெய்யெழுத்து, மேல் வாய்ப் பல்லின் அடியை நாக்கின் நுனி சென்று பொருந்தப் பிறக்கம். என்ற உயிர்மெய்யெழுத்து மேல்வாய்ப் பல்லை அடி நாக்கின் ஓரங்கள் பொருந்தும் முயற்சியால் பிறக்கும். எனவே, தி என்ற வல்லின உயிர் மெய்யெழுத்து, தன் முதல் எபத்துக்களுக்குரிய இருவகை முயற்சிகளையும் தனக்கு முயற்சிப் பிறப்பாகக் கொண்டு பிறத்தல் தெரியவரும்.

இங்ஙனமே, பிற உயிர்மெய்யெழுத்துக்களாகிய சார் பெழுத்துக் கள், தத்தம் முதல் எழுத்துக்குரிய பிறப்பிடங்களை யும், முயற்சி களையும் தத்தமக்குரியனவாகக் கொண்டு பிறக்கும்.

இலக்கண விதி; சார்பெழுத்துக்களில் ஒன்றான ஆய்த எழுத்து, தலையைப் பிறப்பிடமாகக் கொண்டு பிறக்கும். அதற் குரிய முயற்சி வாய்திறத்தல் மட்டுமே ஆகும். ஆய்தம் ஒழிந்த உயிர்மெய் முதலான மற்றைச் சார்பெழுத்துக்கள், தத்தம் முதல் எழுத்துக்களுக்குரிய பிறப்பிடம், முயற்சி ஆகியவற்றையே தாமும் கொண்டு பிறக்கும்.

ஆய்தக் கிடந்தலை யங்கா முயற்சி
சார்பெழுத் தேனவுந் தம்முத லனைய.

(ந-நூற்பா 87.)

பயிற்சி வினாக்கள்

1.பொதுவாகத் தமிழ் எழுத்துக்கள் எங்ஙனம் பிறக்கின்றன?

2.முதல் எழுத்துக்கள் எவை? அவை பிறக்கின்ற இடங்கள்
எவை?

3.அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஐ, ஒள - என்ற உயிரெழுத்துக்களின்
முயற்சிப் பிறப்பைப் கூறுக.

4.க், ங், ச், ஞ், ட், ண் என்ற மெய்யெழுத்துக்களின் முயற்சிப்
பிறப்பைக் கூறுக.